நடிகர் தனுஷ் அரசியல் நோக்கில் சில நகர்வுகளை செய்து வருவதாக பரவலாக பேசப்படுகிறது. அந்தவிதத்தில் தனுஷ் ரசிகர் மன்றத்தில் கோயம்புத்தூரை ஐந்து ஐந்து தொகுதிகளாக பிரித்து மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து தொகுதிவாரியாக பொறுப்பாளர்களை நியமித்து தனுஷ் அரசியலுக்கு அடித்தளமிடுகிறார் எனப் பேசப்படுகிறது. Dhanush அரசியல் எண்ணத்தில்தான் தனுஷ் தொகுதிவாரியாக பொறுப்பாளர்களை நியமிக்கிறாரா என்பதை அறிய அவருக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது, 'கோயம்புத்தூரில் 10 தொகுதிகள் இருக்கிறது. அந்த மாவட்டம் முழுவதையும் சங்கத் தலைவர் நிர்வகித்து வந்தார். அவருக்கு உடல்நலக்குறைவு. அதனால் அவரால் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் பார்த்துக் கொள்ள முடியவில்லை. அதனால் மாவட்டத்தை இரண்டாக பிரிக்கும் வகையில் ஐந்து தொகுதிகளை பிரித்து 'கோவை தெற்கு' எனப் பெயரிட்டு சதீஷ் என்பவரிடம் கொடுத்துவிட்டோம். இதை எங்களின் நற்பணி மன்ற லெட்டர் பேடில் ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக அறிவிப்பாக வெளியிட்டோம். அவ்வளவுதான், மற்றபடி இதில் எந்த அரசியல் நகர்வும் இல்லை. இப்போது வரை எங்களிடம் 54 மாவட்டத் தலைவர்கள் இருக்கிறார்கள். மாவட்டங்களை தொகுதியாகவெல்லாம் பிரிக்கவில்லை. எங்களின் நிர்வாக வசதிக்கு எப்படி தேவைப்படுகிறதோ அப்படித்தான் பிரித்திருக்கிறோம். Dhanush கடந்த 10 ஆண்டுகளாகவே மன்றத்தில் ரசிகர்களை சேர்க்கும் பணி ஆக்டிவாக நடந்து வருகிறது. எங்களை நம்பி வரும் ரசிகர்களை நாங்கள்தானே முறைப்படுத்த வேண்டும். அதற்காக மட்டுமே இதையெல்லாம் செய்கிறோம். எதனால் வெளியே இது வேறு மாதிரியாக பேசப்படுகிறது என தெரியவில்லை. இப்போதைக்கு எந்த அரசியலும் இல்லை. எங்களின் பணிகள் அப்படியே தொடரும்' என்கின்றனர்! காலம் கனியட்டும் என காத்திருக்கிறார்கள் போல! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/weve-been-actively-building-our-fan-base-for-10-years-what-does-dhanushs-fans-club-say




