சென்னை, 3-வது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 12 வாரங்களிலிருந்து 365 நாள்களாக (ஓராண்டு) உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் மனிதவளத்துறை முதன்மைச் செயலாளர் சமயமூர்த்தி இன்று (31-ம் தேதி) அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், 'தமிழ்நாட்டில் அரசுப் பணியில் உள்ள, திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பு என்ற விதிமுறை முன்பு நடைமுறையில் இருந்தது. அதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையில், இரண்டு குழந்தைகளைக் கொண்ட திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு, முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 9 மாதங்களிலிருந்து (270 நாட்கள்) 12 மாதங்களாக (365 நாட்கள்) உயர்த்தி உத்தரவு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2026 மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு, 12 வாரங்களுக்கு மிகாமல் முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. இந்த நிலையில், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர், 2026-2027-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, 18.8.2026 அன்று சட்டமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர், 'தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு, அவர்களது மூன்றாவது குழந்தைக்கு தற்போது வழங்கப்படும் மகப்பேறு விடுப்புக்காலம், 12 வாரங்களிலிருந்து 365 நாட்களாக உயர்த்தப்படும்' என அறிவித்தார். தற்போது அரசு பெண் ஊழியர்களுக்கு, அவர்களின் மூன்றாவது குழந்தைக்கு 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரின் அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், நிரந்தர அல்லது நிரந்தரமற்ற பணியில் உள்ள திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு, அவர்களது மூன்றாவது குழந்தைக்கு அனுமதிக்கப்படும் 12 வார மகப்பேறு விடுப்பை, முழு ஊதியத்துடன் கூடிய 365 நாட்களாக உயர்த்தி அரசு ஆணையிடுகிறது. இந்த விடுப்புக் காலத்தை, பிரசவத்திற்கு முந்தைய ஓய்வு மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய காலம் எனப் பிரித்துக்கொள்ளும் வசதி சம்பந்தப்பட்ட பெண் அரசு ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கப்படும். இந்த ஆணை 2026 ஆகஸ்ட் 25 ந் தேதி முதல் அமல்படுத்தப்படும். ஆனால் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு முன்னதாகவே 3வது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பில் சென்றிருந்து, அத்தேதியிலோ அல்லது அதற்குப் பின்னரோ தொடர்ந்து விடுப்பில் இருக்கும் பெண் அரசு ஊழியர்களும், மொத்தம் 12 மாதங்கள் (365 நாட்கள்) வரையிலான மகப்பேறு விடுப்பைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/one-year-paid-leave-for-female-government-employees-who-have-their-third-child




