தேவையான பொருட்கள்: புளிக்காய்ச்சலுக்கு: சாதம் - 2 கப், நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன், கடுகு - ½ டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், வரமிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - ½ டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, புளி - 1 எலுமிச்சை அளவு, நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. புளியோதரை பொடி செய்ய: எண்ணெய் - 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1½ டேபிள் ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், மல்லி - ½ டேபிள் ஸ்பூன், வரமிளகாய் - 2, வெந்தயம் - ½ டீஸ்பூன், எள் - 1 டேபிள் ஸ்பூன். செய்முறை: முதலில் வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, பொடி செய்வதற்கான கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மல்லி, வரமிளகாய், வெந்தயம் மற்றும் எள் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து, மிக்ஸியில் நைசாக பொடி செய்து வைத்துக்கொள்ளவும். புளியை அரை கப் தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைத்து, கெட்டியான புளிச்சாற்றை எடுத்துக் கொள்ளவும். அடுத்து வாணலியில் நல்லெண்ணெயை காயவைத்து, வேர்க்கடலையை பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு மற்றும் புளிச்சாற்றை சேர்த்து 10-15 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். புளியின் பச்சை வாசனை நீங்கி, கலவை சுண்டி வரும்போது நாட்டுச்சர்க்கரையை சேர்த்து கிளறவும். எண்ணெய் மேலே பிரிந்து வரும்போது அடுப்பை அணைத்து, இந்த புளிக்காய்ச்சலை வேகவைத்த சாதத்தில் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் தயாரித்து வைத்துள்ள புளியோதரை பொடியை தூவி மெதுவாக பிரட்டவும். இறுதியாக புளியோதரையை மூடி வைத்து சுமார் 30 நிமிடங்கள் ஊறவிட்டால், மசாலா மற்றும் புளிக்காய்ச்சல் சாதத்தில் நன்றாக கலந்துவிடும். இப்போது கோவில் பிரசாதத்தின் சுவையை நினைவூட்டும் மணமும் ருசியும் நிறைந்த பெருமாள் கோவில் ஸ்டைல் ஐயங்கார் புளியோதரை பரிமாறத் தயாராகிவிடும். குழந்தைகள் விரும்பும் சுவையான இனிப்பு பூந்தி ரெசிபி! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/ampstories/photo-story/perumal-kovil-suuvaiyil-asaththalaana-iyyangaar-puliyodharai-veettil-eyye-elithaga-seyyalaam




