திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு கவின் நர்சரியை சேர்ந்தவர் சிமியோன் மகன் ஜெப பாஸ்டின் (வயது 29) காஷ்மீரில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரம் சக்கையா நாயக்கனூரைச் சேர்ந்த மானுவேல்மகள் வென்சியா (26) இருவருக்கும் நாளை 13 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெள்ளோடு கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை மதுரையில் செவிலியர் தேர்வு எழுதுவதற்காக மணமகள் வென்சியாவை மணமகன் ஜெப பாஸ்டின் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு காமலாபுரத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு திண்டுக்கல் - மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். அந்த மோட்டார் சைக்கிள் வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி பிரிவு என்ற இடத்தில் வந்த போது திடீரென்று எதிர்பாராத விதமாக கோயமுத்தூரில் இருந்து மதுரைக்கு சென்ற காரின் இடது பக்க முன் டயர் வெடித்ததால் கார் நிலை குலைந்து தாறுமாறாக ஓடி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. வென்சியா இதில் ஜெப பாஸ்டினும் வென்சியா வும் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே மணப்பெண் வென்சியா பரிதாபமாக உயிரிழந்தார். இதில் காயமடைந்த மணமகன் ஜெபபாஸ்டின் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தசம்பவம் குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார் கள். நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/crime/accidents/madurai-tragedy-as-bride-to-be-dies-in-accident-just-a-day-before-her-wedding




