சென்னை, தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 21 மாவட்டங்கள் மழை இந்த நிலையில், தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், பெரம்பலூர், மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மித முதல் லேசான மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, காஞ்சிபுரம், வேலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, தென்காசி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/weather/rain-likely-in-21-districts-until-7-pm




