டகர், உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, முதல் சுற்றின் முடிவில் சிறப்பாக ஆடிய 32 அணிகள் அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் வெற்றிபெற்ற அணிகள் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் முன்னேறின. 16 அணிகள் பங்கேற்ற ரவுண்ட் ஆப் சுற்று நிறைவடைந்த நிலையில் இந்த சுற்றில் வெற்றிபெற்ற 8 அணிகள் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன. காலிறுதி சுற்றில் சிறப்பாக ஆடிய அணிகள் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன. செனகல் இதனிடையே, உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் அணியும் இடம்பெற்றிருந்தது. அந்த அணி ரவுண்ட் ஆப் 32 சுற்றில் தோல்வியடைந்து உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில், உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் செனகல் கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து பாபே தியாவ் நீக்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை தொடரில் தோல்வியடைந்ததால் அணியில் தேவையான மாற்றம் செய்யவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் அணியின் பயிற்சியாளர் பாபே தியாவ் நீக்கப்படுவதாக செனகல் கால்பந்து வாரியம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/football/pape-thiaw-fired-as-senegal-coach-after-disappointing-fifa-world-cup




