சென்னை, டிராவல்ஸ் நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கையாடல் நடந்துள்ளதாக கூறி சரமாரியாக தாக்கியதால் 4-வது மாடியில் இருந்து குதித்து ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். 4-வது மாடியில் இருந்து குதித்தார் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (23 வயது). இவர், சென்னை அண்ணாநகரில் தங்கி, அங்குள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்ற ஆகாஷ், அந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் 4-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கும், அண்ணாநகர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரூ.30 லட்சம் கையாடல் இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, டிராவல்ஸ் நிறுவனத்தில் சுமார் ரூ.30 லட்சம் வரை பணம் கையாடல் நடந்ததாகவும், அதுதொடர்பாக ஆகாஷிடம் நிறுவன உரிமையாளர்கள் விசாரணை நடத்தியபோது அவரை சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் வலி தாங்க முடியாமல் அங்கிருந்து தப்பிப்பதற்காக ஆகாஷ் நிறுவனத்தின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆகாஷ், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/travel-company-rs-30-lakh-embezzlement-employee-dies-by-suicide




