தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் மயில் ஒன்று தோகை விரித்தாடிய காட்சி பக்தர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருச்செந்தூர் கோவில்- மயில் நடனம் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இன்று (புதன்கிழமை) கோவில் வளாகப் பகுதிக்குள் நுழைந்த மயில் ஒன்று, திடீரென தனது வண்ணமயமான தோகைகளை விரித்து கம்பீரமாக ஆடத் தொடங்கியது. பக்தர்கள் மகிழ்ச்சி முருகனின் வாகனமான மயிலே நேரில் வந்து ஆடுவது போல் இருந்த இந்த அழகிய காட்சியைக் கண்டு அங்கிருந்த பக்தர்கள் நெகிழ்ந்து போயினர். பலர் இந்த அதிசய நிகழ்வை தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களாக எடுத்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/peacock-flaunts-its-beauty-in-the-tiruchendur-temple-complex-devotees-are-ecstatic




