சென்னை, பிரதமர் மோடியின் இச்சாதனை, வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நிதிச் சரித்திரம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- 12-ஆம் ஆண்டு விழா "முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்" என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழிக்கு இலக்கணமாகத் திகழும் பிரதமர் நரேந்திர மோடி, எளியோரின் துயர் துடைத்து அவர்களின் வாழ்வை வளமாக்கும் வகையில் தொடங்கி வைத்த 'ஜன்-தன்' திட்டத்தின் 12-ஆம் ஆண்டு விழாவை இன்று நாம் பெருமையுடன் கொண்டாடுகிறோம். நாட்டின் கடைக்கோடி மனிதனுக்கும் வங்கிச் சேவையை உறுதி செய்த இத்திட்டம், கடந்த 12 ஆண்டுகளில் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. பொருளாதார புரட்சி 2026 ஆகஸ்ட் வரையிலான தரவுகளின்படி, இத்திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக 59.09 கோடி பயனாளிகள் வங்கிச் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர். இதில் கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறப் பகுதிகளைச் சேர்ந்த 45.95 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, அவற்றில் தமிழக கணக்குகள் 1,93,55,776 கோடி என்பதும், 32.92 கோடி பெண் பயனாளிகளுக்கு நிதி ரீதியாக அதிகாரமளிக்கப்பட்டுள்ளதும், இதன் மூலம் ஜன் தன் கணக்குகளில் மொத்தமாக ரூ.3,16,513.80 கோடி வைப்புத்தொகை சேமிக்கப்பட்டுள்ளதும் ஒரு மாபெரும் பொருளாதாரப் புரட்சியாகும். பிரதமர் மோடியின் சாதனை இந்த ‘ஜன் தன்’ கணக்குகள் மூலம் எரிவாயு மானியம், விவசாயிகளுக்கான நிதி உள்ளிட்ட அரசின் உதவிகள் இடைத்தரகரின்றி நேரடியாகப் பயனாளிகளுக்குச் சென்றடைகின்றன. ஊழலை வேரறுத்து, நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்த பாரதப் பிரதமர் மோடியின் இச்சாதனை, வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நிதிச் சரித்திரமாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/prime-minister-modis-jan-dhan-financial-revolution-has-enriched-the-lives-of-the-common-people-nainar-nagendran-expresses-pride




