பாட்னா, பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட போலீஸ் ஏட்டு அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, நாடு முழுவதும் பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளது. மாணவர்கள் போராட்டம் பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவை கண்டித்து அனைத்திந்திய மாணவர் சங்கம் மற்றும் இடதுசாரி அமைப்புகள் சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு போராட்டம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஆவேசமாக கோஷங்களை எழுப்பினர். பயங்கர மோதல் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அங்கு பாதுகாப்புக்கு நின்ற சிறப்பு புலனாய்வு பிரிவை சேர்ந்த போலீஸ் ஏட்டு அபிஷேக் படேல் என்பவர், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றார். துப்பாக்கிச் சூடு திடீரென தான் கையில் வைத்திருந்த அதிநவீன 'ஏகே-47' ரக துப்பாக்கியை எடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினார். போலீஸ்காரர் ஒருவர் பொதுமக்களை ஒடுக்கும் ஏகே-47 துப்பாக்கியை எடுத்து மாணவர்கள் மீது நீட்டியதை பார்த்து அதிர்ச்சியடைந்த போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவர்கள் என்ன பயங்கரவாதிகளா? இணையதளங்களில் காட்டுத்தீயாய் பரவிய இந்த வீடியோ காட்சியை பார்த்த பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். "மாணவர்கள் என்ன பயங்கரவாதிகளா? அவர்கள் மீது ஏகே-47 துப்பாக்கியைப் பயன்படுத்துவதா?" என சமூக வலைத்தளங்களில் கண்டனக் கணைகள் குவிந்தன. போலீஸ் சஸ்பெண்ட் இதனை தொடர்ந்து, மாணவர்கள் மீது ஏகே-47 துப்பாக்கியை பயன்படுத்திய போலீஸ் அபிஷேக் படேலை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், அவர் மீது துறை ரீதியான கடுமையான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/police-officer-suspended-for-firing-ak-47-at-students-protesting-neet-paper-leak-in-bihar




