ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா இதில் நடைபெற்றது. உறியடி நடந்தது. உறியடி பானையில் தேங்காய், 5 எலுமிச்சம் பழங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டன. உறியடி பானையில் இருந்த பொருட்கள் ஏலம் விடப்பட்டன. புளியங்குடி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் ஒரு தேங்காயை ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார். அதேபோல 5 எலுமிச்சம் பழங்கள் ரூ.3.70 லட்சத்துக்கும், மஞ்சள் கயிறு ரூ.70 ஆயிரத்துக்கும், வடக்கயிறு ரூ.65 ஆயிரத்துக்கும் உள்பட மொத்தமாக ரூ.8 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது. ஏலம் விடும் நிகழ்ச்சியில் கிராம மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/krishna-jayanthi-festival-uriyadi-pot-items-auctioned-for-8-lakh




