வேலூர், வேலூர்: கோட்டைக்கு உணவு தேடி வந்த மயில்களை பார்த்து ரசித்த மக்கள். வேலூர் கோட்டை 16-ஆம் நூற்றாண்டில் பொம்மி நாயக்கரால் கட்டப்பட்ட கோட்டையாகும். அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்கு பெயர் பெற்றது. ஒரேயொரு வாயில் கொண்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 191 அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையை சுற்றிலும் அமைந்துள்ளது. அரசு அருங்காட்சியகம் 1999-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் முதல் நாளில் இருந்து வேலூர் கோட்டைக்குள் இயங்கி வருகிறது. சுற்றுலா பயணிகள் வேலூர் நகரின் சிறப்புமிக்க கோட்டைக்கு வெளிமாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து கோட்டையை ரசித்து பார்த்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி, உள்ளூர் மக்களும் பொழுதுபோக்கிற்காக கோட்டை பூங்காவுக்கு வருகின்றனர். இந்த நிலையில், வேலூர் கோட்டைக்கு சமீபகாலமாகப் பறவைகள் உணவு தேடி வந்து செல்கின்றன. மயில்கள் நேற்று மாலை கோட்டையின் மேல் பகுதி சுவரில் மயில்கள் கூட்டமாக பறந்து வந்தன. பின்னர் சுவரில் நடந்து வந்த மயில்கள், வடக்கு போலீஸ் நிலையம் எதிரே உள்ள கோட்டை பூங்காவில் கூட்டமாக வந்து அங்கும் இங்குமாக உணவு தேடின. இதை பார்த்த பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்தனர். அந்த வழியாக நடந்து சென்ற சிறுமிகள் கூட்டமாக மயில்களை கண்டதும் மகிழ்ச்சியோடு துள்ளிக்குதித்து, ஆர்வத்தோடு பார்த்து ரசித்தனர். இந்த மயில்கள் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் வந்து செல்வதாக கோட்டை பராமரிப்பு ஊழியர்கள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/vellore-people-enjoyed-watching-peacocks-coming-to-the-fort-in-search-of-food




