கடலூர், கனமழையால் குடியிருப்புகள் மற்றும் 150 ஏக்கர் விளைநிலங்களில் வெள்ளநீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கடும் வேதனையில் உள்ளனர். விவசாய நிலங்களை சூழ்ந்த வெள்ளநீர் கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே உ ள்ள குறிஞ்சிக்குடி கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் மழைநீர் அதிகளவில் தேங்கியது. ஆனால், அப்பகுதியில் உள்ள நீர் செல்லும் பாதைகளான ஓடைகள் மற்றும் வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் காரணமாக தண்ணீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால், மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்தது. மேலும், சுமார் 150 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் முறையாக பராமரிக்கப்படாததும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததுமே மழைக்காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பதாக பொதுமக்களும், விவசாயிகளும் குற்றம் சாட்டுகின்றனர். கோரிக்கை மேலும், கடலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராம பகுதிகளிலும் கனமழையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rains-cause-severe-damage-floods-engulf-150-acres-of-farmland




