ஏதென்ஸ், கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த 54 வயது பெண்மணி கிறிஸ்டினா ரப்தி. இவருடைய 21 வயது மகன் கடந்த ஆண்டு ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். ஒரே மகனை இழந்து தவித்த கிறிஸ்டினாவும். அவரது கணவர் கான்ஸ்டான்டினோஸும் (60) கண்ணீரில் மூழ்கினர். இந்த நிலையில், சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு (2004-ல்) தங்களது சொந்த கருமுட்டை மற்றும் உயிரணுவை ஆய்வகத்தில் ஒன்றாகச் சேர்த்து உருவாக்கப்பட்டு, பாதுகாப்பாக உறைநிலையில் வைக்கப்பட்டிருந்த கருவை செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்பம் மூலம் மீண்டும் தங்களது கருப்பையில் செலுத்தத் திட்டமிட்டனர். கிரீஸ் நாட்டு சட்டப்படி 54 வயது வரை மட்டுமே பெண்கள் இந்தச் சிகிச்சையை மேற்கொள்ள முடியும் என்பதால், அவர்களுக்கு வெறும் 2% மாத கால அவகாசமே இருந்தது. அரசாங்கத்தின் கடுமையான கெடுபிடிகளையும், வயதையும் கடந்து, டாக்டர்களின் தீவிர முயற்சியால் கிறிஸ்டினா கர்ப்பமடைந்தார். தற்போது அவருக்கு 3½கிலோ எடையில் ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது. தங்களது மறைந்த மகன் ஜார்ஜஸின் நினைவாக இக்குழந்தைக்கு 'ஜார்ஜியா' எனப் பெயரிட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/greek-woman-54-gives-birth-using-embryo-frozen-for-22-years-after-losing-son-in-road-crash



