கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சனந்த், ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று (செப்டம்பர் 25-ம் தேதி) வெளியான படம் டோரதி. இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. பாலின பாகுபாடு பார்க்கக் கூடாது என்கிற கான்செப்ட்டில் உருவாகி உள்ள இந்த படத்துக்கு திரையுலகிலிருந்து ஆதரவு அதிகரித்து வருகிறது. டோரதி திரைப்படம் குறித்தும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் குறித்தும் இயக்குநர் மணி ரத்னம் பேசியிருக்கிறார். இது தொடர்பாக வெளியான வீடியோவில், ``கார்த்திக் சுப்புராஜ் மிக மிக விசேஷமான திறமைசாலி. நம்மிடம் பல இளம் நம்பிக்கையளிக்கும் இயக்குநர்கள் உள்ளனர். அவர்களில் கார்த்திக்தான் லீடராக இருப்பார் எனத் தோன்றுகிறது. டோரதி இவரது டோரதி திரைப்படம் ரொம்ப ஸ்பெஷல். டோரதி படத்தின் சினிமா மொழி மிக மிக நன்றாக, மிகவும் ஈர்க்கும் வகையில் உள்ளது. உண்மையிலேயே எனக்கு இவர் மீது பொறாமையாக இருக்கிறது. சினிமா மொழியின் மீதான கட்டுப்பாடு, காட்சி அமைப்புகள் மீதான கட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்பம் என அனைத்துமே மிக அற்புதமாக உள்ளது. இதனுடன் இளையராஜா சாரின் இசையும் சேரும்போது மிக மிக அற்புதமாக இருக்கிறது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான ஒன்று. நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள. உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன். Dorothy Review: பாலினம் குறித்த உரையாடல் - தமிழ் சினிமா பேசத் தயங்கும் விஷயங்களைத் தொடும் டோரதி! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/kollywood/director-mani-ratnam-has-spoken-about-the-film-dorothy-and-karthik-subbaraj



