சென்னை, ஒரு காலத்தில் நான் கனவாக மட்டுமே கண்ட ஒன்று, இப்போது நனவாகி வருகிறது. இது என் முதல் திரைப்படம்; இந்தத் தருணத்தை நான் என்றென்றும் போற்றுவேன். என்று இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி பதிவிட்டுள்ளார். விக்ரம் பிரபுவின் 26-வது படம் நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் 26-வது திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 'சத்ரியன்' (2017) திரைப்படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபு யுவன் சங்கர் ராஜா இருவரும் இணையும் இரண்டாவது கூட்டணி இது என்பதால், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆக்ஷன் திரில்லர் படம் தங்க மார்க்கெட் பின்னணியை மையமாகக் கொண்டு அதிரடி ஆக்ஷன் திரில்லர் படமாக இப்படம் உருவாகிறது. இதில் விக்ரம் பிரபுவுடன் சிவத்மிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் முதற்கட்ட பணிகள் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நான் கண்ட கனவு நனவானது இந்த நிலையில், விக்ரம் பிரபுவின் 26-வது திரைப்படத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலமான அமலா ஷாஜி நடிகையாக அறிமுகமாகிறார். இது குறித்து அமலா ஷாஜி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு காலத்தில் நான் கனவாக மட்டுமே கண்ட ஒன்று, இப்போது நனவாகி வருகிறது. இது என் முதல் திரைப்படம்; இந்தத் தருணத்தை நான் என்றென்றும் போற்றுவேன். இந்த அழகான படைப்பின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் கொள்கிறேன்; அதோடு அளவற்ற நன்றியுணர்வையும் வெளிப்படுத்துகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை அளித்து, என் பயணத்தின் இந்தத் தொடக்கத்தை இவ்வளவு சிறப்பானதாக மாற்றியமைத்த எங்கள் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். அத்துடன், இந்தப் பயணம் முழுவதும் எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்த என் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு சிறிய தொடக்கம் தான், ஆனால் மிகவும் சிறப்பான ஒன்று.” என அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/the-dream-i-had-has-come-true-amala-shaji-makes-her-debut-as-an-actress



