சென்னை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- 1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் மதராஸ் மாநிலம் என்ற பெயரிலேயே தொடர்ந்தது. எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை. தமிழ்நாடு நாள் 1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதல்-அமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்! தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே தமிழ்நாடு நாள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/today-is-the-historic-day-when-the-name-tamil-nadu-was-recognized-mk-stalins-post




