திருச்சி, கரூரில் நடைபெறும் அரசு விழா மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல் அமைச்சர் விஜய் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். பின்னர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கரூர் செல்கிறார். இதனை தொடர்ந்து அவரது கார் அணிவகுப்பு (கான்வாய்) செல்லும் புதுக்கோட்டை சாலை, சென்னை பைபாஸ் சாலை, சஞ்சீவி நகர், குடமுருட்டி பாலம் மற்றும் கரூர் சாலை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 4 இடங்களில் தடுப்புகள் முதல்-அமைச்சர் விஜய்யை பொதுமக்கள் பார்ப்பதற்காக வந்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்காகவும், பாதுகாப்பு கருதியும் திருச்சி விமான நிலையத்தின் எதிர்புறம், போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் அருகில், சஞ்சீவி நகர், சிந்தாமணி அண்ணாசிலை ஆகிய 4 இடங்களில் போலீசார் சாலையோரம் இரும்பு தடுப்புகளை (பேரிகாட்) அமைத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/arrangements-made-for-the-public-to-see-chief-minister-vijay-at-four-locations-during-his-visit-to-karur




