நடிகை பிரிகிடா சகாவுக்கும், நடிகர் - இயக்குநர் அனந்துக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அவருடைய நீண்ட நாள் காதலரான அனந்த்தை அறிமுகப்படுத்தியிருந்தார். அனந்த், 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் மூலம் நமக்கு நடிகராகப் பரிச்சயமானார். Brigida Saga - Ananth Engagement பிறகு, 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தின் இயக்குநராகவும் அறிமுகமானார். இந்நிலையில் நேற்றைய தினம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. இது குறித்து நடிகை பிரிகிடா சகா, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், "சில நேரங்களில், மிகச்சிறந்த காதல் கதைகள் பெரிய திட்டமிடல்களுடன் தொடங்குவதில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் மனதாரத் தேர்ந்தெடுக்கும் இருவரிடமிருந்தே அவை தொடங்குகின்றன. இன்று, எங்களது குடும்பங்களின் ஆசியுடன், எங்களை ஒன்றிணைத்த காதலையும் போற்றும் வகையில், எங்களது இரு குடும்ப வழக்கத்தின்படி எங்கள் நிச்சயதார்த்தத்தைக் கொண்டாடி மகிழ்ந்தோம். View this post on Instagram A post shared by BRIGIDA SAGA (@brigida_saga) எங்கள் பயணத்தை இவ்வளவு அன்போடு ஏற்றுக்கொண்ட உங்கள் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்களது வாழ்த்துகளைப் பார்த்தோம். உங்களது அன்பை உணர்ந்தோம். அதற்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம். இங்கிருந்துதான் எங்கள் 'என்றென்றும்' தொடங்குகிறது" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். பிரிகிடா சகாவுக்கும், அனந்துக்கும் தமிழ் திரையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ``ரஜினி சாரும், ரஹ்மான் சாரும் சொன்ன அந்த வார்த்தைகள்." - பிரிகிடா சகா முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/kollywood/actress-brigida-saga-engaged-to-director-ananth-love-story-instagram-post




