‘எங்களின் கவனத்திற்குக் கொண்டுவராமல் 10 மாதங்களில் 14 முடிவுகள் எடுக்கப்பட்டது’ என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகத் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி போர்க்கொடி தூக்கினர். இது நடந்தது கடந்த செப்டம்பர் 24-ம் தேதி. ஆனால், இதன் பிறகு, செப்டம்பர் 26-ம் தேதி, தேர்தல் ஆணையத்தில் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் மூன்று ஆணையர்களுமே கலந்துகொண்டனர். சுக்பிர் சிங் சந்து, ஞானேஷ் குமார், விவேக் ஜோஷி'ஓமன் நாட்டில் விமானம் இயக்க தடை' Flydubai சம்பவத்திற்கு காரணமான உதவி விமானி ஹமாம் அல்ஹமாமி யார்? ஆனால், அந்தக் கூட்டம் குறித்த அறிக்கையில் குற்றச்சாட்டுகள் குறித்து எந்தப் பதிலும் தரப்படவில்லை. இதெல்லாம் வைத்து, ‘ஞானேஷ் குமார் யாருக்காக. யாருடைய அழுத்தத்தால் இந்த முடிவுகளை எடுத்தார்?’ என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஞானேஷ் குமார் குறித்து இன்று காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “ஞானேஷ் குமாரின் உத்தரவின்பேரில், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் திட்டத்தின் கீழ் தங்களைச் செய்ய வற்புறுத்தப்பட்ட சட்டவிரோதச் செயல்களை, மாநிலங்களின் அனைத்துத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் இப்போதே முன்வந்து வெளிப்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். வாக்காளர் பட்டியலிலிருந்து (இறந்தவர்களைத் தவிர்த்து) 13,30,00,000 (13.3 கோடி) நபர்களை நீக்கியது ஒரு கடுமையான சட்டவிரோதச் செயலாகும். தைரியமாக இருங்கள். இந்திய அரசியலமைப்பைத் தலைநிமிரச் செய்யுங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார். இன்னொரு பதிவில். “ ‘விடுபட்ட’ வாக்காளர்கள் படிவம் 6-ஐச் சமர்ப்பித்து எளிதாக மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியும் என்றால், மேற்கு வங்க S.I.R. வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இந்த விவரம் ஏன் சுட்டிக்காட்டப்படவில்லை? மேற்கு வங்கத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். SIR - சிறப்பு தீவிர திருத்தம்ஸ்டாலின்: “உருவகேலி கூடாது என்ற தலைவரே இப்படி பேசி இருப்பது.” - கொதிக்கும் தமிழக அமைச்சர்கள் இதுதொடர்பான மேல்முறையீடுகளை விசாரிக்கச் சிறப்புத் தீர்ப்பாயங்களை அமைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து லட்சக்கணக்கான மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் ஆறு மாதங்களாகக் கடுமையாக உழைத்து, சுமார் 1,26,00,000 (1.26 கோடி) மேல்முறையீட்டு மனுக்களை முடித்து வைத்தனர். அவற்றில் 91% முதல் 93% வரையிலான மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களின் பெயர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இவை அனைத்துமே வீண்தானா? படிவம் 6-ஐப் பூர்த்தி செய்து அளிப்பதன் மூலம் மட்டுமே மீண்டும் பெயர் சேர்க்கை செய்ய முடியும் என்றால், மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த முழு நடவடிக்கையும் நேர விரயமும் பண விரயமும்தான் என்பது தெளிவாகிறது. 13,30,00,000 (13.3 கோடி) பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்காகக் கோடி கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டது. இப்போது, ‘விடுபட்ட’ வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்ப்பதற்காக மீண்டும் கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படும். இதற்கு யார் பொறுப்பு?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். SIR முடிந்த மாநிலங்களில் விடுபட்ட, புதிய வாக்காளர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் உத்தரவு! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/gyanesh-kumar-faces-questions-over-14-ec-decisions




