டர்பன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு முன்னதாக, தென் ஆப்பிரிக்க அணிக்கு மேலும் ஒரு காயம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் க்வேனா மபாகா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். காயத்தின் தன்மை மற்றும் தீவிரத்தை கண்டறிய அவருக்கு மேலும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.மபாகாவுக்கு பதிலாக லைசாட் வில்லியம்ஸ் தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சுப் பிரிவில் காயம் காரணமாக வீரர்கள் விலகுவது தொடர்கிறது. ஏற்கனவே லுங்கி என்கிடி, டைட்டன்ஸ் அணிக்காக விளையாடியபோது தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகினார். மேலும், காகிசோ ரபாடா மற்றும் ஒட்னியல் பார்ட்மேன் ஆகியோரும் தொடை தசை காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சுப் பிரிவு பல்வேறு காயங்களால் சவாலை எதிர்கொண்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/another-setback-for-south-africa-ahead-of-the-australia-series-fast-bowler-withdraws




