சிவகாசி, சிவகாசியில் கட்டிங் செய்யும் இயந்திரத்தில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெண் பலி சிவகாசியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவர் அங்குள்ள காகித அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் கட்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இன்று காலையில் வழக்கம்போல் கம்பெனிக்குச் சென்று வேலை செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது சேலை இயந்திரத்தில் சிக்கி இயந்திரத்தினுள் இழுத்து சென்றது. இந்த விபத்தில் பாண்டியம்மாளின் கை துண்டாகி, அதிக அளவில் ரத்தம் வெளியேறியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியம்மாளின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-sivakasi-woman-dies-after-getting-stuck-in-cutting-machine



