மோகி, ஜூனியர் பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் 7-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை இந்தியா துவம்சம் செய்தது. லீக் சுற்று ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கிப் போட்டி சீனாவின் மோகி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா 10 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. ஜப்பானை துவம்சம் செய்த இந்தியா பெண்களுக்கான எலைட் பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி, தனது 3-வது லீக் ஆட்டத்தில் நேற்று ஜப்பானை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 7-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இதன் மூலம் தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பதிவு செய்த இந்தியா, காலிறுதிக்கும் தகுதி பெற்றது. சீனாவுடன் இன்று மோதல் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் மலேசியாவை 11-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது. 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/hockey/junior-womens-asia-cup-hockey-india-demolishes-japan




