'லிஃப்ட்', 'டாடா' போன்ற படங்களின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டார் கவின். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தவர் இப்போது சினிமாவில் பரபரப்பான லைன் அப்களுடன் வலம் வருகிறார். கவின் கவின் நடிப்பில் கடைசியாக, கடந்த ஆண்டு 'மாஸ்க்' படம் திரைக்கு வந்திருந்தது. ஆகஸ்ட் 14-ம் தேதி, நயன்தாராவுடன் அவர் நடித்திருக்கும் 'Hi' படம் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து, 'பேர் சொல்லும் பிள்ளை' படம், அறிமுக இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் நடிக்கும் படம் என பிஸியாக இருக்கிறார். கவினுக்கும் அவருடைய காதலி, மோனிஷாவுக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருந்தது. குடும்பத்தினர், நெருங்கிய திரைத்துறை வட்டாரம் என இவர்களின் திருமணம் எளிமையாகவே நடந்திருந்தது. தற்போது இந்தத் தம்பதிக்கு இன்று இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். ஓர் ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறார்கள். எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர்.:) ♥️ — Kavin (@Kavin_m_0431) July 30, 2026 இந்தத் தகவலை அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் நடிகர் கவின். அவருடைய எக்ஸ் பக்கத்தில், " எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர்" எனப் பதிவிட்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/kollywood/actor-kavin-monisha-blessed-with-twin-baby-boy-and-girl




