சென்னை, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் எதிரொலியாக சமூக வலைதளங்களில் பரவும் போலி தகவல்களை தடுக்க மத்திய அரசு தனது அமைச்சகங்கள், துறைகள் வாரியாக விரைவுக் குழுக்களை அமைக்க உள்ளது. தர்மேந்திர பிரதான் பதவி விலகல் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு தார்மீக பொறுப்பு ஏற்று, மத்திய கல்வி மந்திரியாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்ற கோரிக் கையை முன்வைத்து கரப்பான் ஜனதா கட்சியினர் டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் இளைஞர்களிடம் ஆதரவு பெருகியது. போராட்டம் தீவிரம் அடைந்ததால் மந்திரி பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகினார். 'ஜென் இசட்' 'ஜென் இசட்' தலைமுறையினரிடம் பிரபலமாக உள்ள சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்பட்டதே அதிகப்படியானவர்கள் டெல்லியில் ஒன்றுகூடியதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எழுத்து, வீடியோ மற்றும் புகைப்பட வடிவில் பரப்பப்படும் போலியான தகவல்களை முறியடித்து, உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவுக் குழுக்கள் அதன்படி, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலியான தகவல்களை உடனுக்குடன் கண்டுபிடிக்க விரைவுக் குழுக்களை வேகமாக அமைக்குமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தங்களை மையப்படுத்தி வரும் போலியான தகவல்களை நிகழ்நேர அடிப்படையில் கண்டுபிடித்து, அதிகாரப்பூர்வ சமூக வலைதளபக்கத்தில் அதுபற்றிய உண்மை தகவல்களை 2 மணி நேரத்துக்குள் பதிவிட வேண்டும் என்று அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மைத்தன்மையுடன் பதிவுகள் போலி தகவல்களை ஒடுக்க பயன்படுத்தப்படும் பதிவுகள் 200 வார்த்தைகளை தாண்டக்கூடாது. அதேபோல அந்த பதிவுகள் துல்லியமான உண்மைத்தன்மையுடன் இருப்பதையும் உறுதி செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஏற்படுத்த உள்ள விரைவு குழுக்களை சேர்ந்தவர்களுக்கு நிபுணர்களை கொண்டு பயிலரங்கங்கள் நடத்தி பயிற்சி அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/student-protests-prompt-action-rapid-response-teams-formed-to-curb-the-spread-of-fake-information-on-social-media




