காத்மாண்டு, நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 987-ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்துக்கு இரை நேபாளத்தில் இமயமலை பிராந்தியத்தில் உற்பத்தியாகி தெற்கு நோக்கி பாயும் போடேகோஷி ஆற்றில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளை முற்றிலும் நிர்மூலமாக்கி இருக்கிறது. சாலைகள், பாலங்கள், வாகனங்கள், கட்டிடங்கள், செல்போன் கோபுரங்கள் என அனைத்து கட்டமைப்புகளும் வெள்ளத்துக்கு இரையாகி உள்ளன. மேலும் ஆற்றின் போக்கில் உள்ள நகரங்கள், கிராமங்கள் அனைத்தும் சின்னாபின்னமாகி இருக்கும் நிலையில் அங்கு வசித்த மக்கள் ஆயிரக்கணக்கில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உள்ளனர். உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, இந்தியா உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து அங்கு சுற்றுலா சென்றிருந்த நூற்றுக்கணக்கான மக்களும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயிருக்கிறார்கள். சுரங்கங்களில் சிக்கியவர்கள் இவ்வாறு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டவர்களில் பலர் உயிரிழந்திருப்பது அடுத்தடுத்து மீட்கப்படும் பிணங்கள் மூலம் உறுதி செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்றும் ஏராளமான உடல்கள் ஆங்காங்கே மீட்கப்பட்டன. இதன்மூலம் இந்த பேரிடருக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 987 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் இந்தியர்கள் உள்பட 591 வெளிநாட்டினர், 99 பாதுகாப்பு வீரர்கள் உள்பட சுமார் 3,916 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்று தெரியவில்லை. இதுவரை 11,814 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. சீனப் பகுதியைப் பொறுத்தவரை, குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 546 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு அரசு ஊடகமான சிசிடிவி (CCTV) ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. இதில் முக்கியமாக பேரிடர் தாக்கிய பகுதிகளில் இருந்த நீர்மின் நிலையங்களில் பணியாற்றி வந்த 933 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உள்ளனர். இதில் 600-க்கு மேற்பட்டோர் மின் நிலைய சுரங்கங்களில் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. இதுவரை 9,500 பேர் மீட்பு வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் நடந்து வருகின்றன. 7 நாளாக நடந்து வரும் இந்த மீட்புப்ப ணிகளில் இதுவரை 9,500 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். இதில் இந்தியா, சீனா, ரஷியா, இங்கிலாந்து உள்பட பல்வேறு வெளிநாடு களை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் கணிசமாக மீட்கப்பட்டு உள்ளனர். நேபாளத்தில் நடந்து வரும் இந்த மீட்புப்பணிகளில் இந்தியாவை சேர்ந்த பல்துறை நிபுணர்களும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். 3,916 பேரின் கதி என்ன? இதில் இடம்பெற்றுள்ள தடயவியல் நிபுணர்கள், மீட்கப்பட்டு வரும் உடல்களில் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருப்பவற்றில் மரபணு சோதனைகளை நடத்தி வருகின்றனர். இவ்வாறு மரபணு சோதனை முடித்தபின் அவை மொத்தமாக ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு மீட்கப்படும் உடல்கள் பெரும்பாலும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. நேபாள பேரிடர் நிகழ்ந்து 7 நாட்கள் ஆகும் நிலையில், சுமார் 3,916 பேரின் கதி என்ன? என்று தெரியாததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/nepal-flash-flood-death-toll-rises-to-987-nearly-4000-people-still-missing



