சென்னை, சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத் திட்டத்தில் 3 நாட்களில் 3 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பணிகளை நிறைவு செய்து ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 3 நாட்களில் 3 சுரங்கங்கள் இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிடுட்ள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் இரண்டாம் கட்டத் திட்டத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக, வழித்தடம் 3-ல் “அடையாறு” சுரங்கம் தோண்டும் இயந்திரம் 915 மீட்டர் நீளத்தில் சுரங்கம் அமைக்கும் பணியை முடித்து ஆர்.கே.சாலை மெட்ரோ ரெயில் நிலையத்தை வந்தடைந்து. இந்த சுரங்கம் தோண்டும் பணி கடந்த ஆண்டு டிசம்பர் 29 அன்று தொடங்கப்பட்டு 277 நாட்களில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாதனையின் மூலம், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் இரண்டாம் கட்டப் பணிகளின் கீழ் தொடர்ந்து மூன்று நாட்களில் 3 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களின் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது: 29 செப்டம்பர் 2026: வழித்தடம் 3-ல் “காவேரி” சுரங்கம் தோண்டும் இயந்திரம் கீழ்ப்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. 30 செப்டம்பர் 2026: வழித்தடம் 5-ல் “மருதம்” சுரங்கம் தோண்டும் இயந்திரம் வில்லிவாக்கம் பேருந்து நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. 1 அக்டோபர் 2026: வழித்தடம் 3-ல் “அடையாறு” சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஆர்.கே.சாலை மெட்ரோ ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. கெல்லிஸ் முதல் தரமணி வரை இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), பொது மேலாளர் ஆண்டோ ஜோஸ் மெனாச்சேரி (சுரங்கப்பாதை கட்டுமானம்), பொது ஆலோசகர் நிறுவனத்தின் குழுத் தலைவர் டோனி பர்ச்செல், எல்&டி நிறுவனத்தின் திட்ட இயக்குநர் லட்சுமி பிரசாத் வெசாங்கி மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பொது ஆலோசகர் நிறுவனம் மற்றும் ஒப்பந்தாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். வழித்தடம் 3-ல் கெல்லிஸ் முதல் தரமணி வரையிலான 12 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை பகுதியின் கட்டுமானப் பணிகள் எல்&டி நிறுவனத்தால் 8 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராயப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையம் முதல் ஆர்.கே.சாலை மெட்ரோ ரெயில் நிலையம் வரையிலான சுரங்கப்பாதை பணிகள், “பவானி” மற்றும் “அடையாறு” ஆகிய இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தி செப்டம்பர் 2024-ல் தொடங்கப்பட்டன. இதில் Upline பாதையில் “பவானி” சுரங்கம் தோண்டும் இயந்திரம் 13 அக்டோபர் 2025 அன்று தனது பணியை வெற்றிகரமாக நிறைவு செய்த நிலையில், Downline பாதையில் “அடையாறு” சுரங்கம் தோண்டும் இயந்திரம் இன்று 01.10.2026 தனது பணியை நிறைவு செய்துள்ளது. சவாலாக இருந்தபோதிலும்.சாதனை இப்பணியின் போது, “அடையாறு” சுரங்கம் தோண்டும் இயந்திரம் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பீட்டர்ஸ் பாலம், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (EPFO Building), ஆந்திரா பள்ளி மற்றும் பல்வேறு கடைகள் உட்பட பல முக்கிய மற்றும் நெரிசலான கட்டடங்களுக்கு அடியில், சுமார் 9 முதல் 13 மீட்டர் ஆழத்தில் களிமண் கலந்த மணல் பரப்பில் பாதுகாப்பாகச் சுரங்கம் அமைக்கும் பணியை மேற்கொண்டது. சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் முகப்பு பகுதியில் மொத்தம் 11 முறை பராமரிப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நகர்ப்புற நெரிசல் மற்றும் வழித்தடத்தில் பல்வேறு கட்டடங்கள் நிறைந்த சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், தரைப்பகுதியில் எவ்விதப் பாதிப்போ அல்லது சுற்றியுள்ள கட்டடங்களுக்கு எந்தவொரு சேதமோ இன்றி இச்சாதனை வெற்றிகரமாக எட்டப்பட்டது. “அடையாறு” சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் இந்த வெற்றிகரமான வருகை, TU02 ஒப்பந்தத்தின் கீழ் எட்டப்பட்ட 10-வது சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் வெற்றியாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/3-tunneling-operations-completed-in-3-days-chennai-metro-achieves-a-hat-trick




