சென்னை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் 'பெர்சவரன்ஸ்' ரோவர், செவ்வாய் கிரகத்தின் 'பால்பிரீன்' பகுதியில் எடுத்த பிரமாண்டமான 360 டிகிரி பானரோமா வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு மே 26-ந்தேதி, ரோவரின் 1,516-வது செவ்வாய் நாளில் அதன் மாஸ்ட்கேம்-இசட் கேமரா மூலம் எடுக்கப்பட்ட 96 தனித்தனிப் படங்களை இணைத்து இந்த வடிவம் உருவாக்கப்பட்டது. இந்தத் துல்லியமான காட்சியில் செவ்வாயின் பாறை நிலப்பரப்பு, மணல் அலைகள், 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குன்றுகள் மற்றும் ரோவர் விட்டுச் சென்ற சக்கரத் தடங்கள் தெளிவாகப் பதிவாகியுள்ளன. நாசா இதன் மேம்படுத்தப்பட்ட வண்ணப் பதிப்பு மற்றும் இயற்கை வண்ணப்பதிப்பு என இரண்டையும் வெளியிட்டுள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட பதிப்பு வானத்தை நீல நிறத்திலும் நிலப்பரப்பைப் பூமியைப் போலவும் காட்டுகிறது. கடந்த 2021 பிப்ரவரியில் ஜெஸீரோ கிரேட்டரில் தரையிறங்கிய இந்த ரோவர், பழங்கால நுண்ணுயிர் வாழ்க்கைக்கான ஆதாரங்களைத் தேடி வருகிறது. தற்போது ஆய்வு செய்யப்பட்டுள்ள பால்பிரீன் பகுதி, செவ்வாய் கிரகத்தின் மிகவும் பழமையான நிலப்பரப்புகளில் ஒன்றாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின் றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/new-clear-view-of-the-martian-surface-nasa-releases-video




