வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பாகக் களமிறங்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது அதிமுக. மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. கணிதா சம்பத்தையும், தாராபுரம் தொகுதியில் பானுமதியையும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது அதிமுக. யார் இவர்கள்? கணிதா சம்பத் - அதிமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மற்றும் மகளிர் அணி இணைச் செயலாளர் ஆவார். பானுமதி - திருப்பூர் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு 12-வது வார்டு முன்னாள் உறுப்பினர் ஆவார். மதுராந்தகம், தாராபுரம் இரண்டுமே தனித் தொகுதிகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. பானுமதிகணிதா சம்பத்`வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை தந்த தமிழக மக்களே நன்றி!'- முதல்வர் விஜய் அறிக்கை அதிமுகவிற்கு மிக முக்கியம்! இந்த இடைத்தேர்தலைத் திமுக, தவெக மிக முக்கியமாக எதிர்நோக்கி வந்தாலும், இது அதிமுகவிற்கு இந்த இரு கட்சிகளை விட மிக முக்கியமானது என்றே கூறலாம். காரணம், இந்த இரண்டு தொகுதிகளிலுமே, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-தான் வெற்றியைத் தழுவியிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் வெற்றி பெற்றிருந்தனர். இருவரும் அதிமுகதான். இப்போது இவர்கள் இருவரும் அதிமுகவிலிருந்து வெளியேறி தவெகவில் இணைந்துள்ளனர். இதனால், அதிமுக வென்ற தொகுதிகள் அந்தக் கட்சியிடமிருந்து நழுவிச் சென்று இப்போது மீண்டும் தேர்தலைச் சந்திக்கின்றன. வருகிற இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும்தான் தவெக சார்பாகப் போட்டியிடுகின்றனர். இதனால், இது நிச்சயம் அதிமுகவிற்கான கௌரவப் பிரச்னையாகவும் அமையும் என்று கருதப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/aiadmk-names-candidates-for-madurantakam-dharapuram-bypolls




