சென்னை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-மக்களாட்சி தத்துவத்தை புதைக்கும் முயற்சியில் கவர்னர் ஆறு உள்ளது, நீர் எங்கே? மத்திய அரசு மாநிலத்திலும் கூட்டாட்சியை நிலைநாட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் கவர்னர் மதுரையில் நடத்திய ஆய்வு கூட்டமும், நேற்றைய கவர்னரின் உரையும் அமைந்துள்ளது. அண்மையில் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழ்நாடு பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேசும்போது, மதுரை வைகை ஆற்றை பார்த்தேன். ஆறு உள்ளது, நீர் எங்கே? இதற்கு நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். தேசப்பற்று துப்பாக்கி எடுத்து போருக்கு செல்வது மட்டுமல்ல, நதிகளை மீட்பதும் தேசப்பற்றுதான். மதுரை இளைஞர்கள் இதை ஒரு இலக்காக மாற்றி வைகையை மீட்டெடுக்க முன்வர வேண்டும். வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், கவர்னர் மாளிகையே களமிறங்கும் என கூறியுள்ளார்.இதை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா உள்ளிட்ட அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். அதில் வைகை ஆற்றைப் பற்றியும் விசாரித்தறிந்தார். புத்தக வெளியீட்டு விழா இதன் தொடர்ச்சியாக நேற்று கவர்னர் மாளிகையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றியபோது, “மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுபவர்கள் கவர்னர் மாளிகையை அணுகலாம். என்னிடம் அளிக்கும் கோரிக்கைகளை தமிழக அரசிடம் கொண்டு சென்று தீர்வு காண அறிவுறுத்துவேன். ஒன்றிணைந்து மக்களுக்காக செயல்படுவோம். வாக்களித்த மக்களால் பிரச்சினைகளை உணர முடியும். தீர்வு சொல்லவும் முடியும். என்னிடம் தீர்வுகளை சொன்னால் நான் புதிதாக தேர்வு செய்யப்பட்ட முதல்வரிடம் சொல்வேன்” என்று கூறியுள்ளார். கடும் கண்டனம் கவர்னர் என்பதை மறந்தும், தன் அதிகாரம் எதுவரை என்பதை உணராமலும், மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் போல ஆய்வு கூட்டம் நடத்துவதும், ‘என்னிடம் கோரிக்கைகளை சொல்லுங்கள், நான் தமிழக அரசிடம் கொண்டு சென்று தீர்வு காண அறிவுறுத்துவேன்’ என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கவர்னரின் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். குற்றம் சாட்டுகிறேன் மாநில உரிமைகளை விட்டு கொடுக்காமல் சுயசார்புடன் தமிழ்நாடு அரசு ஆட்சி புரிய வேண்டும். கடந்த காலங்களில் மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. மத்திய அரசுடன் இணக்கமாக செல்வது வேறு, இணங்கி செல்வது வேறு. கவர்னரின் அத்துமீறல்களை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது இணங்கி செல்வதை போன்று தோற்றமளிக்கிறது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கடந்த கால வரலாறுகளை தமிழக முதல்-அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும். மத்திய அரசு மாநிலத்திலும் கூட்டாட்சியை நிலைநாட்டும் முயற்சியின் ஒரு பகுதியே கவர்னரின் இந்த செயல்பாடுகள்” என குற்றம் சாட்டுகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களாட்சி தத்துவத்தைப் புதைக்கும் முயற்சியில் ஆளுநர். ஒன்றிய அரசு மாநிலத்திலும் கூட்டாட்சியை நிலைநாட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் ஆளுநரின் மதுரையில் நடத்திய ஆய்வுக் கூட்டமும், நேற்றைய ஆளுநரின் உரையும் அமைந்துள்ளது. அண்மையில் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற… — Velmurugan.T (@VelmuruganTVK) July 5, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/velmurugan-condemns-the-governors-attempt-to-bury-democratic-principles




