‘சிறை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக கவனம் ஈர்த்த அக்சய்குமார் நடிப்பில் உருவான ‘ராவடி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் முதன்மை பாத்திரத்தில் பேசில் ஜோசப் அறிமுகமாகும் படம் ‘ராவடி’. இதில் ‘சிறை’ படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த எல்.கே.அக்ஷய் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் வடிவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் லலித் குமார் தயாரித்துள்ளார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் சத்யன், ஜான் விஜய், ஜாபர் சாதிக், நோபல் கே ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன் மற்றும் ஐஸ்வர்யா சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மலையாளத்தில் முன்னணி இயக்குநராக இருந்து தற்போது முக்கிய நடிகர்களில் ஒருவராக மாறி இருப்பவர் பேசில் ஜோசப். இவர் இயக்கத்தில் உருவான ‘மின்னல் முரளி’ நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார்.இவர் நடித்த ‘ஜெய ஜெய ஹே’, ‘பொன்மேன்’, ‘பேலிமி’ உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் ஆகின. தமிழிலும் இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. ‘பராசக்தி’ படத்தில் இவருடைய கேமியோ பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் நிறைவடைந்த நிலையில், பட ரிலீஸ் தள்ளிப்போனது. கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை பற்றி காமெடி கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு அக்ஷய் குமார், பேசில் ஜோசப் நடித்துள்ள ‘ராவடி’ படம் வருகிற டிசம்பர் 24 அன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. Ooru side boys வராங்க இனி Gujilimasthu தான் From 24.12. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/akshay-kumars-raawadi-film-release-date-announced




