புதுடெல்லி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 8-வது நாளான இன்று, பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கும் (திருத்த) மசோதா, 2026 மீதான விவாதம் மீண்டும் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்ற உள்ளார். கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகளின் அமளியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று விவாதம் நடைபெறுகிறது. 12.30 மணிக்கு ராகுல் காந்தி பேச உள்ளார். இதற்கிடையே இன்று அவை துவங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது அடக்குமுறையை கையாண்ட விவகாரம் தொடர்பாகவும் மேகதாது விவகாரமும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையிலும் அமளி நீடித்தது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டாவிற்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. ஜனநாயகத்தை பாதுகாப்பற்றதாக மத்திய அரசு மாற்றி வருகிறது என்று கார்கே குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த ஜேபி நட்டா, அவசரநிலைக் காலத்தில் மாணவர் போராட்டத்தின்போது வகுப்பறையிலிருந்தே தான் கைது செய்யப்பட்ட அனுபவத்தை கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/uproar-by-opposition-parties-in-lok-sabha-adjourned-until-noon




