நீலகிரி, நீலகிரி மாவட்டத்தில் உயிரிழந்த 2 புலிகளின் உடல்களை வனத்துறையினர் தீ வைத்து எரித்தனர். 2 புலிகள் உயிரிழப்பு நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மார்லிமந்து அணை காப்புக்காடு பகுதியில் உடல் அழுகிய நிலையில் புலி ஒன்று நேற்று இறந்து கிடந்தது. இதே போல், பைக்காரா வனச்சரகம் நடுவட்டம் காப்புக்காடு பகுதியில் மற்றொரு பெண் புலியும் இறந்து கிடந்தது. இந்த 2 புலிகளின் இறப்புக்கான காரணம் தெரியவில்லை. உடல்கள் தீ வைத்து எரிப்பு இறந்த 2 புலிகளின் உடல் பாகங்களும் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட நிலையில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழி காட்டுதலின்படி அவற்றின் உடல்களை வனத்துறையினர் தீ வைத்து எரித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/2-tigers-killed-in-nilgiris-district




