திருச்சி, தேர்தல் பிரசாரத்தின் போது, "பொதுமக்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்" என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது "என் வீட்டுக்கு யாரும் வர வேண்டாம்" என தமிழக சட்டமன்றத் துணை சபாநாயகர் ரவிசங்கர் தனது வீட்டின் முன்பாக பேனர் வைத்துள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். துணை சபாநாயகர் ரவிசங்கர் திருச்சி மாவட்டம், துறையூர் தனி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது சட்டமன்ற துணை சபாநாயகராக பதவி வகித்து வருபவர் ரவிசங்கர். இவர் தவெக கட்சியின் திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது சொந்த வீடு மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம், சக்தி நகரில் அமைந்துள்ளது. அங்கேயே தற்காலிகமாக கட்சி அலுவலகமும் இயங்கி வருகிறது. திடுக்கிட வைத்த பேனர் இந்த நிலையில், அவரது வீடு மற்றும் வீட்டின் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் திடீரென பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், 'என்னை நேரில் சந்திக்க விரும்புவோர், துறையூர் எம்.எல்.ஏ. அலுவலகம் அல்லது மண்ணச்சநல்லூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வர வேண்டும்' என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பூனாம்பாளையத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்கோ அல்லது அதன் அருகே உள்ள கட்சி அலுவலகத்துக்கோ பொதுமக்கள் யாரும் நேரடியாக வர வேண்டாம் என்பதை அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி தேர்தல் பிரசார காலத்தில் 24 மணி நேரமும் பொதுமக்களை சந்திப்பேன் என வாக்குறுதி அளித்த ரவிசங்கர், எம்.எல்.ஏ. துணை சபாநாயகர் பதவிக்கு வந்தவுடன் இப்படி ஒரு கட்டுப்பாட்டை விதித்திருப்பது துறையூர் தொகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பின்னணியில் குடும்ப விவகாரமா? இதற்கிடையே, ரவிசங்கரின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை தொடர்பாகச் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவி வருகின்றன. எனினும், இந்த தகவல்களுக்கு இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை. இது குறித்து தவெக நிர்வாகிகள் தரப்பில் விசாரிக்கையில், "அவர் தனது தனிப்பட்ட குடும்ப விவகாரங்கள் காரணமாக தேவையற்ற பிரச்னைகள் அல்லது சர்ச்சைகள் எதுவும் எழாமல் இருக்கவே, வீட்டுக்கு நேரடியாக வராமல் கட்சி அலுவலகம் அல்லது எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சந்திக்குமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தியிருக்கலாம்" என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த பேனர் வைக்கப்பட்டதற்கான அசல் காரணம் குறித்து ரவிசங்கர் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால் இந்த பேனரின் பின்னணியில் உள்ள உண்மை என்ன என்பது குறித்துத் திருச்சி அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளும், விவாதங்களும் தொடர்ந்து நீடித்து வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/no-one-should-come-to-my-house-dmk-deputy-speaker-ravisankar-banner-shocks-cadres-in-trichy




