சென்னை, 'கருப்பு' வெற்றிக்குப் பிறகு சூர்யாவின் அடுத்த படம் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். நட்சத்திர பட்டாளத்துடன் உருவான படம் சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்துள்ளார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவும், நவின் நூலி படத்தொகுப்பும் மேற்கொண்டுள்ளனர். ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் சமீபத்தில் வெளியான படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், இப்படம் வெளியாகும் முன்பே ரூ.300 கோடிக்கும் அதிகமான ப்ரீ-ரிலீஸ் வணிகத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பாடல் அப்டேட் இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ படத்தின் புதிய பாடல் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது, வருகிற 23ந் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்திலிருந்து புதிய பாடல் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார். நடிகர் சூர்யாவின் குரலில் இந்த பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Suriya sir bday special single — G.V.Prakash Kumar (@gvprakash) July 12, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/gv-prakash-kumar-shares-a-new-song-update-for-the-movie-viswanathan-sons




