புவனேஷ்வர், ஒடிசாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் பாலசோரா, ஜெய்பூர், கோரபுட், மல்கன்கிரி உள்பட 10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக 75 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும், பல பகுதிகளில் மின்சாரம், சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்பாக அம்மாநிலத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டுவெளியேறி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/heavy-rain-in-odisha-75000-people-affected




