பீஜிங், சீனா-பிலிப்பைன்ஸ் இடையே தென்சீனக் கடல் பகுதியைச் சொந்தம் கொண்டாடுவதில் நீண்ட நாட்களாகச் சர்ச்சை நிலவி வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள ஸ்கார்பரோ ஷோல் பகுதியில் பிலிப்பைன்ஸ் அரசு கப்பல்களும், மீனவர் படகுகளும் சென்று கொண்டிருந்தன. அப்போது வந்த சீனக் கடலோர போலீஸ் கப்பல்கள், பிலிப்பைன்ஸ் கப்பல்களை நோக்கி தொடர்ந்து 2-வது நாளாக 'வாட்டர் கேனான்' மூலம் தண்ணீரைப் பீய்ச்சியடித்து அத்துமீறலில் ஈடுபட்டன. இதில் ஒரு சீனக் கப்பல், பிலிப்பைன்ஸ் படகின் மிக அருகே வந்து மோதும் அபாயத்தையும் ஏற்படுத்தியது. இந்த வாரத்தில் மட்டும் இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் 3-வது மோதலாகும். பிலிப்பைன்ஸ் சட்டவிரோதமாக நுழைந்ததாகச் சீனாவும், சீனா தேவையின்றி வம்பு செய்வதாகப் பிலிப்பைன்ஸும் பரஸ்பரம் குற்றம்சாட்டுவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/china-attacks-philippine-ships




