மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான விவகாரம், இரு மாநிலங்களுக்கு நடுவில் பூதாகரமாகியிருக்கிறது. அணை கட்ட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கர்நாடகா அனுமதி கேட்கத் தேவையில்லை என்ற மத்திய இணை அமைச்சரின் பதிலும், விவசாயிகளின் கோரிக்கையும் இரு மாநில எல்லைகளில் பதற்றமான சூழலை உருவாக்கியிருக்கிறது. இதற்கிடையில், காவிரி நீர் வரத்தின்றி டெல்டா விவசாயிகள் கடும் சோகத்தில் இருக்கின்றனர். அதே நேரம், தற்போது இருக்கும் தவெக அரசு சரியாகச் செயல்படாததே இந்தச் சிக்கலுக்குக் காரணம் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மேலும், முதல்வர் கர்நாடகா செல்வதைத் தவிர்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள், விவசாயச் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டுடனான காவிரி நதிநீர் பகிர்வு குறித்து விவாதிக்க ஆகஸ்ட் 2-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``சட்டமன்ற, நாடாளுமன்ற நடவடிக்கைகள் காரணமாக அனைவரும் மிகவும் மும்முரமாக இருந்ததால், இன்று மாலை 5 மணிக்கு நாங்கள் கூடிப் பேசவுள்ளோம். நாங்கள் ஏற்கெனவே அனைத்தையும் விவாதித்து இறுதி செய்துவிட்டோம். இனி நடைமுறை சார்ந்த சில விஷயங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அவற்றையும் நாங்கள் விவாதிப்போம். காவிரி விவகாரம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமையன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் நான் அழைப்பு விடுத்துள்ளேன். தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் வரவிருக்கிறார். காவிரி நீர் விவகாரம் குறித்து விவாதித்து, இரு மாநிலங்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு ஒரு தீர்வை எட்ட நாங்கள் விரும்புகிறோம். அவரது கடிதத்தை நான் ஏற்றுக்கொண்டதுடன், நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளேன்" என்றார். இந்த நிலையில், காவிரியில் 3,500 கன அடி வீதம் 15 நாள்களுக்கு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேகதாது அணை. கர்நாடகாவுக்கு மத்திய நீர்வள ஆணையம் போட்ட பிரேக்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/dk-shivakumar-has-stated-that-chief-minister-vijay-is-attending-the-all-party-meeting




