லண்டன், 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), 114-ம் நிலை வீரரான ஆர்தர் பெர்ரியை (இங்கிலாந்து) எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-6 (7-0), 6-2, 6-4 என்ற நேர்செட்டில் ஆர்தர் பெர்ரியை தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு அரையிதியில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ஜானிக் சினெர் (இத் தாலி) 6-4, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் 7 முறை சாம்பியனும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) வீழ்த்தி இறுதிபோட்டிக்குள் நுழைந்தார். நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்-ஜானிக் சினெர் மோதுகின்றனர். இதில் சின்னர் வென்று மீண்டும் சாம்பியன் பட்டம் பெறுவாரா என்றும், சின்னருக்கு அதிர்ச்சி அளித்து ஸ்வரேவ் சாம்பியன் பட்டம் பெறுவரா எனவும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/tennis/wimbledon-tennis-zverev-and-jannik-sinner-to-clash-in-the-final-tomorrow




