சென்னை, இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்த பிறகு, சுதந்திர தினத்தில் முதல் முறையாக முதல்-அமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக்கொடியை ஏற்றினார். இந்நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “தாய்த் திருநாட்டின் 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள். அடிமைத்தளையில் இருந்து விடுபட்டு இன்று சுதந்திரக்காற்றை சுவாசிக்க குருதி சிந்தி, தன்னுயிரை துச்சமென மதித்து உயிர்த்தியாகம் செய்து, சிறைக் கொடுமைகளை அனுபவித்து சுதந்திரம் பெற்றுக் கொடுத்த விடுதலைப் போராட்ட வீர்களையும், தேசத் தலைவர்களையும் மனதில் நிறுத்தி அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி போற்றி வணங்குவோம். தேசத்தின் வளங்களை போற்றிப் பாதுகாப்போம். 2047-ல் வளர்ச்சி பாரதம் ( Viksit Bharat ) என்ற இலக்கை அடைய தொடர்ந்து முன்னேறுவோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தாய்த் திருநாட்டின் 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு இன்று சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க குருதி சிந்தி, தன்னுயிரை துச்சமென மதித்து உயிர்த்தியாகம் செய்து, சிறைக் கொடுமைகளை அனுபவித்து சுதந்திரம் பெற்றுக் கொடுத்த விடுதலைப் போராட்ட வீர்களையும்,… — Vanathi Srinivasan (@VanathiBJP) August 15, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-continue-to-move-forward-to-achieve-the-goal-of-a-developed-india-by-2047-vanathi-srinivasan




