சென்னை, திராவிடர் கழகம் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்தை மேற்கொள்ள விருந்த நிலையில்,அந்த பரப்புரைக்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்தற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- நீட் எதிர்ப்பு பரப்புரை தடை திராவிடர் கழகம் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்தை மேற்கொள்ள விருந்த நிலையில்,அந்த பரப்புரைக்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிராக தமிழ்நாடு அரசு செயல்படுவது கூடாது. திராவிடர் கழகம் மேற்கொள்ள உள்ள பரப்புரைக்கு உடனடியாக அனுமதி வழங்கிட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-dravidar-kazhagams-anti-neet-vehicle-campaign-communist-party-of-india-condemns




