திருச்சி, திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் பிரிவுக்கு இடையே பொறியியல் பராமரிப்புகள் நடைபெற உள்ளன. இதனால் மயிலாடுதுறை - செங்கோட்டை ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, திருச்சியில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்படும் திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (எண்:56700) இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) ஆடுதுறை வரை மட்டுமே செல்லும். இந்த 2 நாட்களும் மயிலாடுதுறைக்கு செல்லாது. அதுபோல் மயிலாடுதுறையில் இருந்து பகல் 12.35 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (எண்:16847) இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) மயிலாடுதுறையில் இருந்து புறப்படாது. அதற்கு பதிலாக ஆடுதுறையில் இருந்து பகல் 12.58 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-mayiladuthuraisengottai-train-services




