சென்னை, வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு; வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பக்தர்களின் வசதிக்காக சென்னை, பெங்களூரு தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் 27/08/2026 முதல் 10/09/2026 வரை இயக்கப்பட உள்ளன. 29/09/2028 அன்று வேளாங்கண்ணி மாதா கோவிலில் கொடியேறுவதை முன்னிட்டு 28.08.2028 அன்று சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு 160 சிறப்பு பேருந்துகளும், 29/08/2028 அன்று வேளாங்கண்ணியிலிந்து சென்னைக்கு 150 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. அதே போல் 08/09/2028 அன்று கொடி இறங்குவதை முன்னிட்டு சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும் வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மற்ற நாட்களில் தேவைக்கேற்ப சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் wwwtnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்து இயக்கப்படுகின்றன. மேற்படி சேவையை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/velankanni-matha-church-festival-operation-of-special-buses



