பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி 'We The Leaders' என்ற இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அந்த இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இயக்கத்தின் சார்பில் பொள்ளாச்சியில் நேற்று ‘போதைப்பொருள் இல்லாத தமிழகம்’ என்ற மாநாடு நடைபெற்றது. அண்ணாமலை அண்ணாமலையின் இந்த "We The Leaders" மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. * போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம்; யாரையும் பயன்படுத்த விட மாட்டோம். * கோயில்கள், கல்வி நிலையங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். * காலை நேர கள்ளச்சந்தை டாஸ்மாக் விற்பனையைத் தடுக்க வேண்டும். * ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்புத் திட்டம் உருவாக்க வேண்டும். * புதிய பார்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது; மறுவாழ்வு மையங்களை மேம்படுத்த வேண்டும். * விதிமீறலில் ஈடுபடும் FL2 பார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ’We The Leaders அரசியல் கட்சியாக மாறுவது எப்போது?’ – அண்ணாமலை விளக்கம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/what-are-six-resolutions-passed-at-k-annamalais-we-the-leaders-conference




