மும்பை, ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றாலும், இந்த பான்-இந்தியா அடையாளமும் எளிதாகக் காணாமல் போய்விடும்" என்று நடிகர் யாஷ் நேர்காணலில் பேசியுள்ளார். கே.ஜி.எப் மூலம் பான் இந்தியா நட்சத்திரம் நடிகர் யாஷ், இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான 'கே.ஜி.எப்' மற்றும் 'கே.ஜி.எப் 2' படங்களின் மூலம் பான்-இந்தியா நட்சத்திரமாக உயர்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான இந்த படங்கள் வசூலில் சாதனை படைத்து, யாஷுக்கு நாடு முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கின. அடுத்தடுத்த படங்களில் பிஸி தற்போது யாஷ், இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்தில் நடித்துள்ளார். கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் கேங்ஸ்டர் டிராமாவாக தயாராகி உள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ராமாயணா படத்தில் ராவணனாக நடித்து வருகிறார். நேர்காணலில் பேசிய யாஷ் இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார் நடிகர் யாஷ். அந்த நேர்காணலில் விஜய், அல்லு அர்ஜுன், ராம் சரண் போன்ற முன்னணி நடிகர்களைவிட உங்களுக்கு எப்படி ஆரம்பத்திலேயே பான்-இந்தியா ஸ்டார் முத்திரை கிடைத்தது? என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு வெள்ளிக்கிழமை எல்லாவற்றையும் மாற்றிவிடும் அதற்கு பதிலளித்த யாஷ், "ஒரே ஒரு வெள்ளிக்கிழமை எல்லாவற்றையும் மாற்றிவிடும். ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றாலும், இந்த பான்-இந்தியா அடையாளமும் எளிதாகக் காணாமல் போய்விடும்" என்றார். மேலும், முத்தக்காட்சிகளில் நடித்தது குறித்து பேசியபோது, "முத்தக்காட்சிகளில் நடித்ததை என் மனைவி விரும்பியிருக்க மாட்டார் எனத் தெரியும். ஆனால், கதைக்குத் தேவைப்படுவதால் அக்காட்சி இடம்பெறுகிறது. அவரும் ஒரு நடிகையாக இருந்தவர் என்பதால் என்னைப் புரிந்துகொள்கிறார். அவை கதைக்குத் தேவையாக இருப்பதால் அப்படி நடிக்க வேண்டியது அவசியமாகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/its-not-permanent-actor-yash-speaks-candidly-about-the-pan-india-tag




