கம்பம், கம்பம் உழவர் சந்தைக்கு சுமார் 5 அடி நீளமுள்ள முருங்கைக்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கம்பத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். வேளாண் துறை சார்பில் தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுவதால், வெளிச்சந்தையைவிட குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கின்றன. உழவர் சந்தை இதனால் கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி, கேரளம் மாநிலத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளும் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். கிலோ ரூ.40-க்கு விற்பனை இந்தநிலையில், நேற்று உழவர் சந்தைக்கு சுமார் 5 அடி நீளமுள்ள முருங்கைக்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. 1 கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த முருங்கைக்காய், நீளமாகவும் வித்தியாசமான தோற்றத்துடனும் இருந்ததால் கேரளம் வியாபாரிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/5-feet-drumsticks-arrive-at-farmers-market-public-interest



