சென்னை, குற்றவாளிகள் நிரம்பிய கேபினட்டாக தவெக அமைச்சரவை இருக்கிறது. இது தொடர்பாக தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- அமலாக்க துறையை வைத்து பாஜக செய்ததை காவல்துறையை வைத்து தவெக செய்கிறது குதிரை பேரத்தில் ஈடுபட்ட விஜய் அரசின் மூக்கு அறுபட்டது தி.மு.க. சட்டத்துறை இணை செயலாளர் வழக்கறிஞர் இ.பரந்தாமன், முன்னாள் எம்.எல்.ஏ, பேட்டி மூக்கு அறுக்கப்பட்டிருக்கிறது திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது குதிரைபேர குற்றச்சாட்டை சுமத்தி மக்கள் மத்தியிலே திமுக மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற தவெக அரசின் முயற்சி முறியடிக்கபட்டுள்ளது. நேற்று எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கின் மூலமாக நீதிமன்றத்தால் விஜய் அரசினுடைய மூக்கு அறுக்கப்பட்டிருக்கிறது. இது பொய்யான வழக்கு இந்த வழக்கில இவரை கைது செய்து சிறைக்கு அனுப்ப வேண்டிய முகாந்தரம் இல்லை என்ற அடிப்படையில் நேற்றைக்கு அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் மூலம், முதல் முறையாக இந்த குதிரைபேர சர்க்கார் மூக்கறுக்கப்பட்டுள்ளது. என்ன மர்மம். ஆட்சிக்கு வந்து 55 நாட்களை கடந்தும் நிர்வாகத்தை பற்றி கவலைப்படாத தவெக அரசு தினந்தோறும் திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது எந்த குற்றங்களை சுமத்தலாம் என்று சிந்தித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையை அரங்கேற்றி வருகிறார்கள். அந்த வகையிலதான் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஒரு அவதூறு வழக்கு. அவதூறு வழக்கு போடுவதில் கைது செய்ய வேண்டிய அவசியம் கிடையவே கிடையாது. முன்ஜாமீன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட ஒரே காரணத்திற்காக அவசர அவசரமாக ஓடி வந்து அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை கைது செய்வதனுடைய பின்னணி என்ன. எதற்கு ஒரு அவதூறு வழக்கில் கைது செய்தவரை 6 மணி நேரம் 7 மணி நேரம் காவல்துறை விசாரணை செய்தது. அது என்ன மர்மம். தவெக வில் இணைய பணம் தருகிறோம் அந்த விசாரணையின் போது அனிதா ராதாகிருஷ்ணன் எம். எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யுங்கள் தவெக வில் இணைய பணம் தருகிறோம்” என கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டு. 6 மணி நேர விசாரணை இதற்காக தான் நடந்துள்ளதா. பாஜக எப்படி ED யை விட்டு மிரட்டி கட்சியில் சேர்க்கிறார்களோ அதேபோல தான் காவல்துறையை வைத்து மிரட்டி கட்சிக்கு ஆள் சேர்க்கும் வேலையை தவெக அரசு செய்கிறது. 420 நிர்மல் குமார் இந்த உண்மை வெளிப்பட்ட உடன் பதறிப்போய் நேற்று இரவு 9 மணிக்கு சட்டத்துறை அமைச்சர் திரு.நிர்மல் குமார் ஒரு பேட்டி கொடுக்கிறார். பேட்டியில் முறையான விளக்கம் கொடுத்தால் பரவாயில்லை. ஆனால் அவர் என்ன சொல்கிறார் தனி நபர் அவதூறு செய்கிறார். உடல் கேலி செய்கிறார். எங்களின் எம். எல். ஏ வை ரௌடி என கூறுகிறார். இப்படி எல்லாம் சொல்லும் நிர்மல் குமார் மீது உக்கரபாண்டியன் என்பவர் உசிலம்பட்டியில் நில மோசடி செய்தார் நிர்மல் குமார் என 420 புகார் கொடுத்துள்ளார். இந்த 420 நிர்மல் குமார் வந்து திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய சட்டமன்ற உறுப்பினரை பார்த்து ரவுடி என்றெல்லாம் சொல்ல எந்த அருகதையும் இல்லை. வேடிக்கை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூரில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு மக்களை கொன்று குவித்த கட்சி திராவிட முன்னேற்ற கழகம், கொன்று குவித்தவர் என்று எங்க தலைவருடைய பெயரை சொல்றார். இது எந்த விதத்தில நியாயம்? இப்படி அவதூறா பேசக்கூடிய இந்த ஆதவ் அர்ஜுனா ஏன் கைது பண்ணாம இன்னும் வேடிக்கை பார்த்திட்டு இருக்கிறது காவல்துறை. கொலைமிரட்டல் வழக்கு யாரை ரவுடின்னு சொல்றாரு நிர்மல் குமார் நிதித்துறை அமைச்சராக இருக்கிறாரே மரிய வில்சன் அவர் மீது வீடு புகுந்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்த வழக்கு உள்ளது. அந்த வழக்கு தொடர்பாக இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் அவரை ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பட்டுள்ளது. அதேபோல ஒரு மினிஸ்டர் மேல பவுடர் குற்றச்சாட்டு இருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மேல பாதிக்கபட்ட பெண் அளித்த குற்றச்சாட்டு இருக்கிறது. அமைச்சர் நிர்மல் குமார் மீது 420 புகார் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தலைமை அமைச்சரா இருக்கக்கூடிய விஜய் மீது குதிரைபேர ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி இருக்கிறோம். இப்படி கிரிமினல் பின்னணி கொண்ட கேபினட்டாக, குற்றவாளிகள் நிரம்பிய கேபினட்டாக தவெக அமைச்சரவை இருக்கிறது. இப்படிபட்ட தவெக அரசாங்கம் திராவிட முன்னேற்ற கழகத்தை பார்த்து கேள்வி கேட்பதற்கு துளியும் அருகதை இல்லை. நேற்றைக்கு அதிமுகாவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் முன்னால் அமைச்சர் ஓஎஸ் மணியன் 'விஜய பாஸ்கர் அமைச்சர் பதிவி வாங்கிதருவதாக பேரம் பேசினார்' என கூறி இருக்கிறார். யார் இந்த குதிரை பேரத்தை செய்து கொண்டு உள்ளார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். வடிகட்டியே பொய் திராவிட முன்னேற்ற கழகம் வென்று இருக்கிறது 59 இடங்கள். ஒரு எம்எல்ஏ, இரண்டு எம்எல்ஏ வை விலைக்கு வாங்கி எப்படி ஆட்சி அமைக்க முடியும் இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தவெக அமைச்சர்கள் எல்லாம் பேசுவது வடிகட்டியே பொய். திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய நிர்வாகிகள் மீது குற்றம் சுமத்த வேண்டிய நோக்கத்திற்காக மட்டுமே கூறப்படும் குற்றச்சாட்டு. ஆட்சி அதிகாரத்தில் உட்கார்ந்து தினம் தினம் அரசு நிர்வாகத்தை கவனிக்க துப்பில்லை. நிர்வாகம் தேங்கி கிடக்கிறது. ஆட்சிக்கு வந்து 56 நாளாவது இதுவரைக்கும் மக்களுக்கான வேலை என்ன செய்துள்ளது இந்த அரசு. நடவடிக்கை எடுத்தீர்களா. குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர்கள் மீது எல்லாம் நடவடிக்கை எடுக்க துப்பில்லை சமூக வலைதளத்தில் அரசின் குறைகளை சுட்டிக்காட்டி செயலாற்றி கொண்டிருக்கக்கூடிய ஆர்ஜே.சரண் ஜெயராமன் போன்ற தம்பிகளை எல்லாம் பொய் காரணம் சொல்லி கைது செய்து கொண்டுள்ளனர். திமுக மீது அவதூறுகளை பரப்பி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மேயர் பிரியா உள்ளிட்ட கழக மகளிர் நிர்வாகிகளை கொச்சையாக பேசிவரும் தவெக ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தீர்களா. மாற்றம் கொடுப்போம் என்று சொல்லிவிட்டு ஆட்சிக்கு வந்து அதிமுக கட்சியில இருப்பவரை தவெக கட்சியில சேர்க்கும் கட்சி மாற்றம் தான் நடந்துள்ளது. இன்னும் பலரை ராஜினாமா செய்ய வைத்து ஆளும் கட்சியில் இணைக்கும் முயற்சியில் தான் இந்த அரசு உள்ளது. இவற்றை எல்லாம் விட்டுவிட்டு வரக்கூடிய திங்கட்கிழமையில் இருந்தாவது மக்கள் பணியில் ஈடுபடுங்கள். உதாரணம் இந்தியாவிற்கு முன் மாதிரியாக இருந்த தமிழ்நாட்டு அரசியலின் மாண்பை சிதைத்து, ஒரு மோசமான அரசியலை முன்னெடுத்து வருகிறது இந்த தவெக அரசு. ஒரு அரசியல் கட்சி எப்படி இருக்க கூடாது என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் தவெக. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvks-cabinet-is-filled-with-criminals-dmks-allegation




