கியாஸ் நிறுவனங்கள் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், மாதம் ஒன்றுக்கு 25 லட்சத்துக்கும் அதிகமான வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தது.அதாவது, மானியத்துடன் கூடிய சிலிண்டரை பெற்று வணிகப் பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவதாகவும், ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருப்பதாகவும், இறந்து போன நபர்கள் பெயரில் உள்ள இணைப்புகளை வேறு சிலர் பயன்படுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.5 பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு 35 முதல் 40 நாட்கள் வரை ஒரு சிலிண்டர் போதுமானதாக இருக்கும் நிலையில், ஒரே ஒரு நபர் மட்டுமே உள்ள வீடுகளில் கூட வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் பெறப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.இதையடுத்து கள்ளச்சந்தையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை செய்வதை தடுக்கவும், சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கத்திலும் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு ‘இ-கே.ஒய்.சி.’ அடிப்படையில் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/deadline-extended-for-e-kyc-for-domestic-lpg-cylinders




