கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் விக்னேஷ் உள்ளிட்ட காவல் துறையினர், இன்று காலை வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த சொகுசு கார் ஒன்றை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். காரின் பின்புறத்தில் மூட்டை மூட்டையாக பொருட்கள் இருப்பதைப் பார்த்த உதவி ஆய்வாளர் விக்னேஷ், அவற்றை சோதனையிட முயன்றார். அப்போது காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர், போலீஸாரைத் தள்ளிவிட்டு காரின் கதவுகளை மூடி, திடீரென காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. வேல்முருகன் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தலைமை காவலர் வேல்முருகன், உடனடியாக ஓடும் காரின் மேற்கூரையில் பாய்ந்து பிடித்துக் கொண்டார். ஆனால், போலீஸ் காரின் மீது இருப்பதையும் பொருட்படுத்தாமல் கடத்தல்காரர்கள் காரை தொடர்ந்து வேகமாக ஓட்டிச் சென்றனர். விளாங்குறிச்சி, காளப்பட்டி, சித்ரா வழியாக கணியூர் சுங்கச்சாவடியை நோக்கி கார் சென்றது. அங்கு ஃபாஸ்டேக் மூலம் சுங்கக் கட்டணம் செலுத்திவிட்டு, தடுப்புகளை கடந்து கார் மீண்டும் வேகமாகச் சென்றுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த கணியூர் போலீஸார் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் காரைத் துரத்திச் சென்றனர். மேலும், அவிநாசி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவிநாசி போலீஸாரும் காரை எதிர்நோக்கி விரைந்தனர். காரில் தொங்கியபடி சென்ற போலீஸ் கடத்தல்காரர்கள் சுமார் 40 கி.மீ. தூரம் சென்ற நிலையில், அவிநாசி அன்னபூர்ணா ஹோட்டல் அருகே ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் காரைச் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர். அதில் இருந்த இருவர் தப்பியோடிய நிலையில், ஒருவரை போலீஸார் பிடித்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் தப்பியோடிய மற்ற இருவரையும் அவிநாசி போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாபு தாரா, ராஜேஷ், சுரேஷ் என்பதும், பெங்களூருவில் இருந்து சுமார் 300 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே, காரின் மேற்கூரையில் தலைமை காவலர் வேல்முருகன் ஆபத்தான நிலையில் தொங்கியபடி செல்வதைப் பார்த்த வாகன ஓட்டிகள், தங்களது செல்போன்களில் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ஆபத்தான நிலையில் தொங்கியபடி சென்று கடத்தல்காரர்களை பிடிக்க உதவிய தலைமை காவலர் வேல்முருகனின் துணிச்சலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். வறுமையை வைத்து வலைவீச்சு. போலீஸ் அலட்சியத்தால் சீரழிக்கப்பட்ட சிறுமி! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/crime/police-caught-a-smuggling-gang-while-hanging-onto-the-roof-of-a-car-moving-at-40-km




