Doctor Vikatan: எனக்கு இரண்டு குழந்தைகள். இருவருமே காலை உணவுக்கு வழக்கமான இட்லி, தோசை போன்ற உணவுகளைச் சாப்பிடுவதில்லை. தினமும் மில்க் ஷேக் மட்டுமே கேட்கிறார்கள். இப்படி தினமும் மில்க் ஷேக் கொடுப்பது ஆரோக்கியமானதா. அது சத்தான உணவாக இருக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் ``உணவுக்கு மாற்றாக நீங்கள் மில்க் ஷேக் கொடுக்கிறீர்கள் என்றால், அதை அதிகபட்ச ஊட்டச்சத்து நிறைந்ததாகத் தயாரித்துக் கொடுக்க வேண்டியது முக்கியம். உதாரணத்துக்கு, ஃப்ரெஷ்ஷான பழங்களில் செய்யப்படும் மில்க் ஷேக், காய்கறிகள் மற்றும் பாலக் கீரையில் செய்யப்படுகிற ஸ்மூத்தி போன்றவற்றைக் கொடுக்கலாம். இவை குழந்தைகளுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளைக் கொடுப்பதோடு, நார்ச்சத்துக்கும் உதவும். உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகரின் வழிகாட்டுதலோடு, அவர்கள் பரிந்துரைக்கும் நியூட்ரிஷனல் சப்ளிமென்ட் சேர்த்தும் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். அதன் மூலம் குழந்தைகளுக்குத் தேவையான புரதச்சத்து அதிகரிக்கும். குழந்தைகள் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வோடும் இருப்பார்கள். பாலை காய்ச்சாமல் பயன்படுத்தாமல், காய்ச்சி ஆற வைத்து அதையே மில்க் ஷேக் செய்யப் பயன்படுத்த வேண்டும். சரிவிகித உணவு கொடுக்க முடியாத நிலையில், புரதச்சத்தும், ஆற்றலும் நிறைந்த மில்க் ஷேக் நிச்சயம் குழந்தைகளுக்கு உதவும். குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பதற்காக செயற்கை மணமூட்டி, நிறமூட்டி, சுவையூட்டிகள், இனிப்புகள் போன்றவற்றைச் சேர்க்க வேண்டாம். ஜங்க் உணவு சாப்பிட வேண்டும் என்றால் கூடவே ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட்டாக வேண்டும் என பழக்கலாம். Doctor Vikatan: பால் குடித்தால் அல்சர் பாதிப்பு சரியாகுமா, காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டுமா? குழந்தைகளுக்குப் பிடித்த உணவு என்பதால், உணவுக்கு மாற்றாக அதையே கொடுத்துக் கொண்டிருக்க வேண்டாம். எல்லாவகையான உணவுகளையும் உண்பதற்கு அவர்களைப் பழக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஜங்க் உணவுகளே கொடுக்காமல் இருக்க முடியாது. அதனால் அவற்றை அளவில் குறைத்துக் கொடுக்கலாம். ஜங்க் உணவு சாப்பிட வேண்டும் என்றால் கூடவே ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட்டாக வேண்டும் என பழக்கலாம். " உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் என்ற பெயரில் வெளியாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/health/is-giving-kids-a-daily-milkshake-a-healthy-alternative-to-breakfast




